2022ஆம் ஆண்டு அரசாங்கம் கவிழும் ஆண்டாக இருக்கும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அரசாங்கம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு தற்போதைய அரசாங்கத்தை தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க அனுமதிக்க முடியாது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்றும் குறிப்பாக மகா பருவத்தில் நெல் அறுவடை குறைந்தது 50 சதவிகிதம் குறைவதால், உரப் பிரச்சினையின் விளைவாக காய்கறிகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
கொடுக்கப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப அரசாங்கத்திற்கு அதிக வாய்ப்புகளை வழங்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் போராட்டங்கள் அரசாங்கத்தை கவிழ்க்கக்கூடும் என்பதை வரலாறு காட்டியுள்ளதால், அரசாங்கத்தை கவிழ்க்க தேர்தல் தேவையில்லை என்றும் அடுத்த ஆண்டு எழுச்சிக்கு தயாராகுங்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.