இலங்கை மருந்துக் கூட்டுத்தாபனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட 11 இலட்சத்து 47 ஆயிரத்து 770 டோஸ் பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
குறித்த தடுப்பூசிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, இலங்கை மருந்துக் கூட்டுத்தாபனத்தின் விசேட குளிர்பதன வசதிகள் பொருத்தப்பட்ட லொறிகள் மூலம் இந்த தடுப்பூசிகளை கொழும்பிலுள்ள மத்திய களஞ்சிய வளாகத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.