கண்டி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் சம்பந்தப்பட்ட அனைவரினதும் ஒருங்கிணைந்த முயற்சியால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட தொற்றுநோய் நிபுணர் வைத்தியர் பசன் ஜயசிங்க தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு வீதம் நாளொன்றுக்கு 30ஆகக் குறைந்துள்ளதாகவும் கடந்த மாதங்களுடன் ஒப்பிடும்போது கடந்த மூன்று மாதங்களாக இறப்பு விகிதம் பெருமளவில் குறைந்துள்ளதாகவும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது தொற்றுநோய் பரவல் அதிக வீதத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக வைத்தியர் ஜயசிங்க சுட்டிக்காட்டினார்.
கொடிய நோயிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக சுகாதார அதிகாரிகள் தங்களுடைய வேலைத்திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்த அவர், பண்டிகைக் காலங்களில் சுகாதார வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார்.