தற்காலிகமாக மூடப்பட்டுள்ள சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் திறக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 27ஆம் திகதி இவ்வாறு மீள திறக்கப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மசகு எண்ணெய் அடங்கிய கப்பலொன்று எதிர்வரும் 23ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளது.
டொலர் தட்டுப்பாடு காரணமாகவே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.