இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 90 ஆயிரத்து 928 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதேநேரம் 325 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் நேற்று மாத்திரம் 19 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாகவும், மருத்துவ மனையில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 2 இலட்சத்து 85 ஆயிரத்து 401 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.