• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
வடகிழக்கு கட்சிகளின் பயணத்துக்கு தடையாக இருக்க போவதில்லை –  மனோ, திகா, இராதா கூட்டாக அறிக்கை!

வடகிழக்கு கட்சிகளின் பயணத்துக்கு தடையாக இருக்க போவதில்லை –  மனோ, திகா, இராதா கூட்டாக அறிக்கை!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/01/07
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
82 0
A A
0
36
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

“இந்திய பிரதமருக்கு, இலங்கையின் ஒட்டுமொத்த தமிழ் பேசும் கட்சிகளின் விண்ணப்ப கடிதம்” என்று ஆரம்பிக்கப்பட்ட கூட்டு செயற்பாட்டில், சமீபத்தைய இந்திய வம்சாவளி மலையக தமிழரின் அபிலாசைகளையும் உள்ளடக்குவதில் சிக்கலை எதிர்கொண்டதாலும், எனவே எமது பங்களிப்பு வடகிழக்கு தமிழ் கட்சிகளின் சுதந்திர செயற்பாட்டுக்கு பாதகமாக இருப்பதை உணர்ந்ததாலும், இந்த செயற்பாட்டுக்கு வெளியில் நின்று அவசியமான ஒத்துழைப்புகளை வழங்குவோம் என கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வே. இராதாகிருஷ்ணன் ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இலங்கை அரசியலமைப்பில் ஏற்கனவே உள்ள 13வது (13A) திருத்த சட்டத்தை  முற்று முழுதாக நடைமுறைப்படுத்தி, அர்த்தமுள்ள அதிகார பகிர்வை உறுதி செய்து, மாகாணசபை தேர்தலையும் விரைந்து நடாத்த இலங்கை அரசை வலியுறுத்த, இந்தியாவை ஒருமித்து தமிழ் பேசும் மக்களின் கட்சிகள் கோருதல்” என்ற அடிப்படையிலான அழைப்பின் பேரிலேயே ஏற்பாட்டாளர்களால் இந்த கூட்டு செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலை கழகம், தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கட்சி ஆகிய வட கிழக்கு தமிழ் கட்சிகளுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளும் நவம்பர் இரண்டாம் திகதி நடைபெற்ற முதல் கலந்துரையாடலில் கலந்துக்கொண்டன.

இலங்கை அரசமைப்பில் இடம் பெற்றுள்ள ஒரே அதிகார பரவலாக்கல் சட்டமான 13ம் திருத்தம் என்பதை இறுதி தீர்வாக கருதி இந்த பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவில்லை.

ஆனால் இலங்கை அரசாங்கம், இந்த குறைந்தபட்ச சட்டத்தைக்கூட முழுமையாக அமுல் செய்யாமல் இழுத்தடிப்பதுடன், இச்சட்டமூலம் மாகாணசபைகளுக்கு வழங்கிய அதிகாரங்களையும்கூட வாபஸ் பெறுகிறது என்ற உண்மை உலகிற்கு அதிகாரபூர்வமாக ஒட்டுமொத்த தமிழ் பேசும் கட்சிகளால் அறிவிக்கப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கமே எமது பொது நோக்காக இருந்தது.

 இந்த செயற்பாட்டில், இலங்கை தமிழரசு கட்சியும் உள்வாங்கப்பட வேண்டும் என்பதை ஆரம்பம் முதல் வலியுறுத்தி கூட்டமைப்பின் தலைவரை நேரடியாக, மனோ கணேசனும், ரவுப் ஹக்கீமும் சந்தித்து அழைப்பு விடுத்ததையும், தமிழரசு கட்சியை தவிர்த்து விட்டு விண்ணப்ப கடிதத்தில் கையெழுத்திடும் யோசனையை, தமிழ் முற்போக்கு கூட்டணியாகிய  நாம் நிராகரித்தோம் என்பதையும் ஏற்பாட்டாளர்கள் நன்கறிவார்கள்.

 ஆரம்பத்தில், பாரத பிரதமருக்கான கடித வரைபு, அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொள்ளும், பொது குறைந்தபட்ச நிலைப்பாடுகளை கொண்ட விண்ணப்ப கடிதமாக சுமார் ஒன்றரை பக்கத்தில் வடிவமைக்கப்பட்டது.

எனினும் தொடர்சியாக நடைபெற்ற கலந்துரையாடல்களின் போது, தமிழ் தேசிய அரசியலின் சமகால வரலாறு முழுமையாக அதில் எழுதப்பட்டு, எட்டு பக்கங்களை கொண்ட நீண்ட ஆவணக்கடித வரைபாக மாற்றப்பட்டது.  இதன் பின்னுள்ள நியாயப்பாட்டை எம்மால் புரிந்துக்கொள்ள முடிகிறது.

ஆனால் ஒட்டு மொத்த தமிழ் பேசும் மக்கள் சார்பான கடிதம் என்பதால், இதே நியாயப்பாட்டின் அடிப்படையில், இக்கடிதத்தில் மலையக தமிழ் மக்களின் அபிலாஷகளும் உள்ளடக்கப்பட வேண்டிய இயல்பான தேவைப்பாடு எழுந்தது.

மேலதிகமாக இந்த  ஆவணக்கடித வரைபு, இறுதி வடிவம் பெறமுன்னரே ஊடகங்களின் வெளிப்படுத்தப்பட்டு வாதப்பிரதிவாதங்களை தமிழ் பேசும் அரசியல் சமூக பரப்புகளில் ஏற்படுத்தியது.

இந்நிலையிலேயே, கடந்த வருடத்தின் இறுதி நாளான்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களது கொழும்பு இல்லத்தில், தமுகூ தலைவர் மனோ கணேசன் உட்பட கட்சி தலைவர்கள், பிரதிநிதிகள் கூடி ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் மறுநாள் இவ்வருடத்தின் முதல் நாள், கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் எம்பியின் கொழும்பு இல்லத்தில் கூடி புதிய கடித வரைபு தயாரிக்கப்பட்டது.

ஆனால், இந்த ஆவணக்கடித வரைபு, உடனடியாகவே இலங்கை தமிழரசு கட்சியின் தலைமை சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டதை நாம் அறிந்தோம்.

ஆகவே, பொது ஆவணம் தயாரிக்க முடியாமையை கருத்தில் கொண்டு சமீபத்தைய இந்திய வம்சாவளி மலையக தமிழரின் அபிலாஷைகளை முன்னிறுத்தி பாரத பிரதமர், இலங்கை ஜனாதிபதி, தமிழக முதல்வர் உள்ளிட்ட அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல் தலைவர்களுக்கும் ஆவணக்கடிதம் எழுத தமிழ் முற்போக்கு கூட்டணி முடிவு செய்துள்ளது.

இப்பின்னணிகளிலேயே, தேவையற்ற முரண்பாடுகளை தவிர்க்கும் நோக்கில், “வடகிழக்கு தமிழ் கட்சிகளின் இந்த செயற்பாட்டுக்கு வெளியில் நின்று ஒத்துழைப்புகளை வழங்குவோம்” என்ற முடிவை நாம் எடுத்துள்ளோம்.

வடகிழக்கு உடன்பிறப்புகளுக்கு, வரலாறு முழுக்கவும் இதை நாம் செய்துள்ளோம். இனியும் செய்வோம். “உரிமைக்கு குரல் கொடுப்போம், உறவுக்கு கை கொடுப்போம்” என்ற எமது கொள்கை தொடரும்.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: இலங்கைதமிழ் பேசும் கட்சி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

Next Post

நாட்டின் எதிர்காலத்துக்காக, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் குழுவாகப் பணியாற்ற வேண்டும் – ஜனாதிபதி!

Related Posts

ஐ.நா நிரந்தர வதிவிடப் பிரதிநிதியை சந்தித்த மலையக மீள்கட்டுமானத்திற்கான சிவில் சமூக கூட்டிணைவு!
இலங்கை

ஐ.நா நிரந்தர வதிவிடப் பிரதிநிதியை சந்தித்த மலையக மீள்கட்டுமானத்திற்கான சிவில் சமூக கூட்டிணைவு!

2026-01-28
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு குறித்த முக்கிய அறிவிப்பு!
இலங்கை

அஸ்வெசும பயனாளர்களுக்கான செய்தி

2026-01-28
தமிழரசின் தலைவர் செயலாளரையும் சந்தித்த கனேடிய உயர்ஸ்தானிகர்
யாழ்ப்பாணம்

தமிழரசின் தலைவர் செயலாளரையும் சந்தித்த கனேடிய உயர்ஸ்தானிகர்

2026-01-28
8 மாதங்களில் 22 பில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டிய விமானத்துறை!
இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திலுள்ள இலத்திரனியல் நுழைவாயில்கள் இன்றுமுதல் திறப்பு!

2026-01-28
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்  – பலங்கொட கஸ்ஸப தேரர் உட்பட 10 பேர் நீதிமன்றில்!
இலங்கை

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – பலங்கொட கஸ்ஸப தேரர் உட்பட 10 பேர் நீதிமன்றில்!

2026-01-28
விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் உயிரிழப்பு!
ஆசிரியர் தெரிவு

விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் உயிரிழப்பு!

2026-01-28
Next Post
நாட்டின் எதிர்காலத்துக்காக, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் குழுவாகப் பணியாற்ற வேண்டும் – ஜனாதிபதி!

நாட்டின் எதிர்காலத்துக்காக, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் குழுவாகப் பணியாற்ற வேண்டும் – ஜனாதிபதி!

யாழில் நாளை “அம்புலு” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

யாழில் நாளை "அம்புலு" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

அரிசியின் விலையும் அதிகரிக்கும் அபாயம்!

மியன்மாரில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
ஐ.நா நிரந்தர வதிவிடப் பிரதிநிதியை சந்தித்த மலையக மீள்கட்டுமானத்திற்கான சிவில் சமூக கூட்டிணைவு!

ஐ.நா நிரந்தர வதிவிடப் பிரதிநிதியை சந்தித்த மலையக மீள்கட்டுமானத்திற்கான சிவில் சமூக கூட்டிணைவு!

0
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு குறித்த முக்கிய அறிவிப்பு!

அஸ்வெசும பயனாளர்களுக்கான செய்தி

0
ஆப்பிள் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

ஆப்பிள் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

0
பிரித்தானியாவுக்கு எதிராக ருவாண்டா வழக்கு தாக்கல்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.