• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழ் இந்து மகளிர் கல்லூரியின் புதிய வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

யாழ் இந்து மகளிர் கல்லூரியின் புதிய வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

Hanushya P by Hanushya P
2026/07/03
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

மாகாணத்திற்கான குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையின் ஊடாக 2026ம் ஆண்டிற்கான மாகாண கல்வி அமைச்சின் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் புதிய வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,

80 ஆண்டுகளுக்கும் மேலான கல்விச் சேவையை வழங்கி வரும் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி வட மாகாணத்தின் கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.

‘ஒரு நாட்டை நிலையான முறையில் கட்டியெழுப்புவதற்கான மிகப்பெரிய முதலீடு மனித வள மேம்பாடாகும். அந்த மனித வளத்தை உருவாக்குவதற்கான அடித்தளம் கல்வியே.

அதனால்தான் எமது அரசாங்கம் கல்வித் துறைக்கு முன்னுரிமை அளித்து பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

மேலும் போதைப்பொருள் வியாபாரிகள் மாணவர்களை இலக்காகக் கொண்டு சமூகத்தை சீரழிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும்இ அதனால் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் நடவடிக்கைகள் குறித்து கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மாணவர்களின் கல்விப் பயணத்தில் நிலவும் சவால்கள் மற்றும் அழுத்தங்களை கருத்தில் கொண்டு கல்விச் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும்இ மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் கல்வி முறைமையை மேம்படுத்த அரசாங்கம் தொடர்ந்து செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நிகழ்வின் நிறைவில் கல்லூரியின் வளர்ச்சிக்கும் கல்வி முன்னேற்றத்திற்கும் பங்களித்து வரும் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள்,  பெற்றோர்கள்,  பழைய மாணவர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் அனைவருக்கும் அமைச்சர் தனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், கல்வித் திணைக்கள அதிகாரிகள், பாடசாலையின் பழைய மாணவர்கள், அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

Related

Tags: foundation stoneJaffna Hindu Women's Collegenew classroom buildingProvincial Development Grant.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

குறைந்த வாடகையில் மின்சார வாகனங்கள் மீண்டும் கிடைக்கும்!

Next Post

நாட்டின் பல பகுதிகளில் மழை

Related Posts

செம்மணியில் இன்றைய  அகழ்வில்  05 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !
இலங்கை

செம்மணியில் இன்றைய அகழ்வில் 05 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

2026-08-12
கீரிமலையில் குப்பை விவகாரம் –  இன்றைய தினம் கவனயீர்ப்பு நடவடிக்கையாக துண்டுப்பிரசுரங்கள் மக்களுக்கு விநியோகம் !
இலங்கை

கீரிமலையில் குப்பை விவகாரம் – இன்றைய தினம் கவனயீர்ப்பு நடவடிக்கையாக துண்டுப்பிரசுரங்கள் மக்களுக்கு விநியோகம் !

2026-08-12
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து டிப்பர்களும் உழவு இயந்திரம் ஒன்றும் சிறப்பு அதிரடிப்படையினால் பறிமுதல்!
இலங்கை

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து டிப்பர்களும் உழவு இயந்திரம் ஒன்றும் சிறப்பு அதிரடிப்படையினால் பறிமுதல்!

2026-08-12
இந்திய டெஸ்ட் தொடருக்கு இலங்கை அணியில் புதிய முகங்கள்?
இலங்கை

இந்திய தொடருக்கான இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு!

2026-08-12
சித்தாண்டியிலிருந்து செல்வச்சந்நிதியை வந்தடைந்த 60க்கும் மேற்பட்ட சைவ யாத்திரிகர்கள்!
இலங்கை

சித்தாண்டியிலிருந்து செல்வச்சந்நிதியை வந்தடைந்த 60க்கும் மேற்பட்ட சைவ யாத்திரிகர்கள்!

2026-08-12
கீரிமலை கண்டகி தீர்த்த கரையில் பிதிர்க்கடன் நிறைவேற்றும் பூசை வழிபாடுகள்!
இலங்கை

கீரிமலை கண்டகி தீர்த்த கரையில் பிதிர்க்கடன் நிறைவேற்றும் பூசை வழிபாடுகள்!

2026-08-12
Next Post
காற்றின் வேகம் அதிகரிப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் மழை

வலிகாமம் கிழக்கு தவிசாளர் நிரோஷ் உள்ளிட்டோருக்கு பிடியாணை மீளப்பெறல்

வலிகாமம் கிழக்கு தவிசாளர் நிரோஷ் உள்ளிட்டோருக்கு பிடியாணை மீளப்பெறல்

வாராந்தம் 2,500 க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிப்பு

இலங்கையில் தீவிரமடையும் டெங்கு பரவல்

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.