இந்தியா – அமெரிக்கா இடையே செல்லும் 14 விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் இரத்து செய்துள்ளது.
அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 5ஜி அலைக்கற்றை விமானப் போக்குவரத்தினை பாதிக்கும் என்பதால் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நேற்று (புதன்கிழமை) அமெரிக்கா செல்ல தயாராக இருந்த 8 விமானங்களையும் இன்று புறப்பட இருந்த 6 விமானங்களையும் ஏர் இந்தியா நிறுவனம் இரத்து செய்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் தலைவர் அருண் குமார், அலைக்கற்றையால் வரும் பிரச்சினைகளை சரிசெய்வதற்கான பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொண்டு வருகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.