சீனாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை இந்தியா தூதரக ரீதியாக புறக்கணித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான சீனாவின் நடவடிக்கைகளை கண்டித்தே மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 40 நாடுகள் பங்கேற்கும் தொடக்க விழாவையும், நிறைவு விழாவையும் இந்தியா புறக்கணிக்கவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.