இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சின் வட்டாரத் தகவல்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி இலங்கைக்கு வர வாய்ப்புள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய வாய்ப்புவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்தும் இந்தியாவின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த விஜயங்கள் பார்க்கப்படுகின்றன.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் புதுடில்லிக்கான தனித்தனியான விஜயங்களை முடித்துக்கொண்டுள்ளனர்.
தொடர் விவாதங்களுக்காக ராஜபக்ஷ மீண்டும் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.