• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
தெருப்போராட்டத்தை மொழிப்போராட்டமாக நடத்தும் நிலைமைக்கு தள்ளிவிட வேண்டாம் – சீன, இலங்கை அரசுகளிடம் மனோ!

இந்திய வம்சாவளி மலையக மக்களின் அரசியல் ஆவணம் 21ஆம் திகதி கொழும்பில் இறுதி வடிவம் பெறுகிறது!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/02/18
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, பிரதான செய்திகள், மலையகம்
77 0
A A
0
51
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் முற்போக்கு கூட்டணியின் கோரிக்கையின் பேரில், கண்டி சமூக அபிவிருத்தி மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் பி. முத்துலிங்கம் மற்றும் சமூக செயற்பாட்டாளர் கௌதமன் பாலசந்திரன் ஆகியோரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்திய வம்சாவளி மலையக மக்களின் அரசியல் ஆவண வரைபு,  எதிர்வரும் 21ஆம் திகதி கொழும்பில் கலந்துரையாடப்பட்டு இறுதி வடிவம் பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலில் தமிழ் முற்போக்கு கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் மலையக சிந்தனையாளர்கள் கலந்துக்கொள்வார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “இறுதி வடிவம் பெறுகின்ற இந்த ஆவணம், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட அனைத்து கட்சி தலைவர்கள், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உட்பட தமிழக கட்சி தலைவர்கள், பிரித்தானியா, அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட சர்வதேச நாட்டு அரசுகள், சர்வதேச நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு சேர்ப்பிக்கப்படும்.

அத்துடன் இந்த ஆவணம் தேசிய ரீதியான கலந்துரையாடல்களுக்காக நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரந்து வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூக அமைப்புகளுக்கு வழங்கப்படும்.

சிவில் சமூக அமைப்புகளுடன் நாம் நடத்த உத்தேசித்துள்ள கலந்துரையாடல்கள், இலங்கை, இந்தியா, பிரித்தானியா மற்றும் சர்வேதச அரசு நிறுவனங்களுடன் நாம் நடத்தும் பேச்சுவார்த்தைகளுக்கு அடிப்படையாக அமையும் என நாம் நம்புகிறோம்.

புதிய அரசியலமைப்பு வரைபை தாயரித்து வரும் தனது உத்தேசத்தை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. புதிய அரசியலமைப்பு வரைபு எழுதப்பட்டு வருவதையும் நாமறிவோம்.

இந்த பின்னணியில் இன்றைய சூழலில் எழுந்துள்ள புதிய நிலைமைகளை கருத்தில் கொண்டு மலையக மக்கள் தொடர்பாக விரிவுபடுத்தப்பட்ட நிலைப்பாட்டு கோரிக்கைகளை நமது நாட்டு அரசுக்கு அறிவித்து, பேச்சுவார்த்தைகளில் ஈடுபட நாம் உதேசித்துள்ளோம்.

அதேவேளையில் இலங்கை அரசுக்கு இந்திய அரசு வழங்கி வரும் உதவிகள் மற்றும் அதன்மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள புதிய கருத்து பறிமாற்றங்களையும் நாம் அவதானித்து வருகிறோம்.

இந்த தொடர்பாடல்கள், பொருளாதார ஒத்துழைப்பு விவகாரங்களுடன் மாத்திரம் மட்டுப்படுவது முறையானதல்ல என நாம் நம்புகின்றோம்.  1954 (நேரு-கொத்தாவலை), 1964 (சிறிமா-சாஸ்திரி),1974 (சிறிமா-இந்திரா), ஆகிய ஆண்டுகளில் இலங்கை இந்திய அரசு தலைவர்கள் மத்தியில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்களின்படியும், இந்திய பிரதமர்களுக்கும், இலங்கை ஜனாதிபதிகளான ஜே.ஆர். ஜெயவர்த்தன, ஆர். பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின்படியும், இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்கள், குறிப்பாக இந்திய வம்சாவளி மலையக மக்கள் தொடர்பில் இலங்கை அரசுடன் இந்திய அரசுக்கும் இருக்கின்ற கடப்பாடுகள் நல்லெண்ண அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும்  என்பதுவே தமிழ் முற்போக்கு கூட்டணியின் எதிர்பார்ப்பாகும்.

இதுபற்றி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கும், தமிழக அரசியல் கட்சிகளுக்கும் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பையும் தமிழ் முற்போக்கு கூட்டணி நிறைவேற்றும்.

அதேவேளை மலைநாட்டு தோட்ட தொழிலாளர்களை இலங்கை தீவுக்கு அழைத்து வந்து பெருந்தோட்ட பொருளாதாரத்தை கட்டி எழுப்பி, பயன்பெற்றதன் அடிப்படையில் பிரித்தானிய இராணியின் அரசாங்கத்துக்கும், மலையக மக்கள் தொடர்பில் இருக்கின்ற பெரும் கடப்பாட்டையும் எடுத்து கூறி, பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவும்,   ஐநா உட்பட சர்வதேச சமூகத்தை அணுகவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் முடிவு செய்துள்ளது.

நாம் முன்வைக்க உள்ள, இந்திய வம்சாவளி மலையக மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கும் இந்த அரசியல் ஆவணம், மேற்கண்ட அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு நட்புறவு மற்றும் நல்லெண்ண நடவடிக்கைகளுக்கும் அடிப்படையாக  அமையும் என நாம் நம்புகிறோம்.

இது தொடர்பில் நாடெங்கும் வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்களினதும், அனைத்து சகோதர மக்களினதும் ஒத்துழைப்புகளையும், ஆதரவையும் நாம் கோருகிறோம்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: இந்திய வம்சாவளிகூட்டணி கட்சிதமிழ் முற்போக்கு கூட்டணிநாடாளுமன்ற உறுப்பினர்கள்மனோ கணேசன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அரசாங்கத்தினால் நாட்டின் தேசியப் பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியாமல் போயுள்ளதாக எதிர்கட்சி குற்றச்சாட்டு!

Next Post

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழுநோயாளர்கள் அதிகரிக்கும் அபாயம் – சுகுணன்

Related Posts

காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

“வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

2026-03-15
போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!
இலங்கை

போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

2026-03-15
போர்ச் சூழலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தயார்நிலை: ஜனாதிபதி விசேட அறிவுறுத்தல்கள்!
இலங்கை

போர்ச் சூழலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள தயார்நிலை: ஜனாதிபதி விசேட அறிவுறுத்தல்கள்!

2026-03-15
முன்பள்ளி பாடத்திட்டம் குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்
இலங்கை

முன்பள்ளி பாடத்திட்டம் குறித்து பிரதமர் வெளியிட்ட தகவல்

2026-03-15
மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது QR நடைமுறை!
இலங்கை

மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது QR நடைமுறை!

2026-03-15
கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘The English Hub’ கற்றல் மையம் திறப்பு!
இலங்கை

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘The English Hub’ கற்றல் மையம் திறப்பு!

2026-03-15
Next Post
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழுநோயாளர்கள் அதிகரிக்கும் அபாயம் – சுகுணன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழுநோயாளர்கள் அதிகரிக்கும் அபாயம் - சுகுணன்

மன்னார் மாவட்டத்தில் சீரற்ற மின் விநியோகம் குறித்து மின் பாவனையாளர்கள் விசனம்!

மின்தடை தொடர்பிலான இடங்களும் நேர அட்டவணையும் வெளியானது

நான்காவது ரி-20: மேக்ஸ்வெலின் பொறுப்பான துடுப்பாட்டதால் இலங்கை அணியை வீழ்த்தியது அவுஸ்ரேலியா!

நான்காவது ரி-20: மேக்ஸ்வெலின் பொறுப்பான துடுப்பாட்டதால் இலங்கை அணியை வீழ்த்தியது அவுஸ்ரேலியா!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

0
கார்- லொறி மோதி விபத்து- 6 பேர் உயிரிழப்பு – 7 பேர் காயம்

நேபாளத்தில் கோர விபத்து!

0
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

“வைத்தியசாலைகளுக்குச் செல்லக்கூட முடியவில்லை” – எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கவலை!

0
போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

போதைப்பொருளுடன் பயணிப்பதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடி படகு ஒன்று பொலிஸாரால் பறிமுதல்!

0
வெளியானது நாகபந்தம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.