இலங்கை கிரிக்கெட் அணிக்கெதிரான நான்காவது ரி-20 போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் 4-0 என்ற கணக்கில் அவுஸ்ரேலியா அணி முன்னிலை வகிக்கின்றது.
மெல்பேர்ன் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற் அவுஸ்ரேலியா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் அணி, 139 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பெத்தும் நிஸங்க 46 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அவுஸ்;ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஜெய் ரிச்சட்சன் மற்றும் கேன் ரிச்சட்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஆஸ்டன் அகர் மற்றும் ஆடம் செம்பா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 140 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, 18.1 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, க்ளேன் மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காது 48 ஓட்டங்களையும் ஜோஸ் ங்லீஸ் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், லஹிரு குமார 2 விக்கெட்டுகளையும் மகேஷ் தீக்ஷன மற்றும் துஸ்மந்த சமீர ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.