உக்ரைனுக்கு அப்பால் ரஷ்யாவின் தாக்குதலுக்கு சாத்தியம் இருப்பதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைன் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிப்பார் என்று தான் உறுதியாக நம்புவதாகவும் கூறியுள்ளனர்.
அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனமான ஏபிசிக்கு அளித்த செவ்வியில், ‘வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கிலிருந்து நாட்டின் மீது பலமுனைத் தாக்குதலை நடத்துவதுடன், தலைநகர் கீவ் மற்றும் உக்ரைனில் உள்ள பிற முக்கிய நகரங்களைத் தாக்குவது ரஷ்ய திட்டத்தின் ஒரு பகுதி.
உக்ரைனுக்கு அப்பால் ஒரு ரஷ்ய தாக்குதல் சாத்தியம். ஆனால் நேட்டோ நட்பு நாடுகளைப் பாதுகாப்பதில் அமெரிக்காவின் உறுதியாக இருக்கும். நேட்டோவின் ஒரு உறுப்பினர் மீதான தாக்குதல் நேட்டோவின் அனைத்து உறுப்பினர்கள் மீதான தாக்குதலாகும்.
நேட்டோ பிரதேசத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் நாங்கள் பாதுகாப்போம் என்பதில் ஜனாதிபதி மிகவும் தெளிவாக இருக்கிறார். உக்ரைனுக்கு அப்பால் செல்லும் ஜனாதிபதி புடினுக்கு எதிரான மிக சக்திவாய்ந்த தடுப்பு இதுவாகும்.
நிலைமை தீவிரமடையும் பட்சத்தில், புடினை நேரடியாக குறிவைக்க தற்போதுள்ள அமெரிக்க தடைகளை விரிவாக்குவதற்கான சாத்தியம் இன்னும் மேசையில் உள்ளது’ என கூறினார்.
பல தசாப்தங்களில் ஐரோப்பாவில் நடந்த முதல் பெரிய தரைப் போரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ரஷ்யாவின் படையெடுப்பின் இரண்டாம் நாளில், உக்ரைனின் தலைநகரான கிய்வ் நோக்கி ரஷ்ய வீரர்கள் முன்னேறி வருகின்றனர்.
இந்தநிலையில், சுமார் 100,000 உக்ரேனியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக ஐ.நா அகதிகள் நிறுவனம் கூறுகிறது.