எதிர்வரும் பண்டிகை காலங்களில் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
பண்டிகை காலத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கொரோனா பற்றி சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், தடுப்பூசி பெற்றுக்கொள்வது அனைவரின் பொறுப்பாகும் அதன் மூலமே கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும் என்று டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.