நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் ஆகியவற்றினை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் இதுகுறித்த தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
இதற்கமைய நிலையான வைப்புத்தொகை வசதி 6 தசம் 5 சதவீதமாகவும், நிலையான கடன் வசதி 7 தசம் 5 சதவீதமாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.
பொருளாதார நடவடிக்கைகளில் தொடரும் தடைகளை கவனத்தில் கொண்டு நேற்றைய தினம் நடைபெற்ற மத்திய வங்கியின் நாணய சபை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.