இரு அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை ஜனாதிபதியின் தன்னிச்சையான தீர்மானம் அல்ல என கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் மற்றும் பிரதமருடனான சந்திப்பின் பின்னர் ஜனாதிபதியினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என கூறினார்.
யாரேனும் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றவில்லை என்றால், அந்த வாய்ப்பை சிறப்பாகச் செய்யக்கூடிய ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என கூறினார்.
ஜனாதிபதி இந்த தீர்மானத்தை மேற்கொண்ட போதிலும் பிரதமர் கலந்துரையாடலில் பிரசன்னமாகியிருந்ததாக இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
மேலும், எரிபொருள் மற்றும் எரிவாயுக்கான வரிசைகள் சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்டு தற்போதைய மின் நெருக்கடியை எரிசக்தி அமைச்சு தவிர்த்திருக்க முடியும் என கூறினார்.