எரிபொருள் ஏற்றிய கப்பலொன்று நாளை(ஞாயிற்றுக்கிழமை) அல்லது நாளை மறுதினம் நாட்டை வந்தடையவுள்ளது.
எரிசக்தி அமைச்சு இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளது.
துபாயில் இருந்து நாட்டை நோக்கி புறப்பட்டுள்ள குறித்த கப்பலில் 30 ஆயிரம் மெட்ரிக் தொன் எண்ணெய் கொண்டுவரப்படுகின்றது.
நாட்டை வந்தடைந்துள்ள கப்பலிலுள்ள 8 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசலை, மின்சார உற்பத்திக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.