தமிழகத்திலிருந்து இலங்கைக்கான அதிசொகுசு உல்லாச கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுற்றுலா சபையின் தலைவர் கிமார்லி பெர்னாண்டோ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சேவை இலங்கைக்கான முதலாவது உல்லாச கப்பல் சேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சேவையின் முதலாவது பயணம் சென்னையிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.
குறித்த கப்பல் தங்கும் அறை வசதி முதல் பயணிகளின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பலில் பயணிக்க விரும்பும் பயணிகள் இரண்டு தடுப்பூசிகளை பெற்றிருப்பது அவசியம் எனவும் தொற்று ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் PCR பரிசோதனை அறிக்கையை வைத்திருக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.