நாளை (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது .
எரிபொருள் விலையேற்றத்தினால் பேருந்து தொழிற்சங்கம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எரிபொருள் மானியம் அல்லது பேருந்து கட்டண அதிகரிப்பை பேருந்து தொழிற்சங்கங்கள் முன்மொழிந்மை குறிப்பிடதக்கது .
மேலும் கட்டண திருத்தங்கள் அமைச்சரவையில் நாளை சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .