இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டிகளில் ஸ்பெயினின் ரபேல் நடாலும், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் கார்ஃபியாவும் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
முதல் காலிறுதிப் போட்டியில், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் கார்ஃபியாவும் பிரித்தானியாவின் கேமரூன் நோரியும் பலப்பரீட்சை நடத்தினர்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், அல்கராஸ் கார்ஃபியா, 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இரண்டாவது காலிறுதிப் போட்டியில், ஸ்பெயினின் ரபேல் நடாலும், அவுஸ்ரேலியாவின் நிக் கிர்கியோசும் மோதினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 7-6, 5-7, 6-4 என்ற செட் கணக்குகளில் நடால் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றார்.