ரஷ்யாவிடம் இருந்து மிகக் குறைந்த அளவிலேயே எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதாக மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
கச்சா எண்ணெய் இறக்குமதி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், ரஷ்யா-உக்ரைன் போரையும் அதனால் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஏற்படும் தாக்கத்தையும் மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாக குறிப்பிட்டார்.
2021-2022 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்களிப்பு மிக்க குறைந்த அளிவிலேயே உள்ளமையையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இப்போது கச்சா எண்ணெய் விலை அதிக ஏற்ற இறக்கத்துடன் உள்ளதாக தெரிவித்த அவர்,. இந்தியாவின் எண்ணெய் நிறுவனங்கள் ஆரம்பக்காலங்களில் இருந்து ரஷ்யாவில் 16 பில்லியன் டொலர் முதலீடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.