மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான டீசல் பற்றாக்குறையால் நாட்டின் முன்னணி மின் உற்பத்தி நிலையங்களின் செயற்பாடுகள் செயலிழந்துள்ளது.
மேலும், நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்து வருவதால், மின் உற்பத்தி செய்யும் பணியில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலைமை காரணமாக நாடளாவிய ரீதியில் பல மணிநேரங்கள் மின்வெட்டினை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.