அதி நவீன ஹைப்பர்சோனிக் ஏவுகணையை செலுத்தி, மேற்கு உக்ரைனில் பூமிக்கு அடியில் இருக்கும் மிகப்பெரிய ஆயுத கிடங்கை அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கின்செல் பாலிஸ்டிக் ஏவுகணை எனப்படும் இந்த ஏவுகணைகளை ஒரு போரில் ரஷ்யா பயன்படுத்துவது இதுவே முதல் முறை.
இந்த ஏவுகணைகள் மிக்-31 ரக போர் விமானங்கள் மூலம் ஏவப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
‘கின்செல்’ எனப்படும் இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை மணிக்கு 6,000 கிலோமீட்டர் வேகத்தில் 2,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது.
ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு வேகமான ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் 8 மீட்டர் நீளம் கொண்டவை மற்றும் போர்தந்திர திறன் கொண்டவை.
இலக்கை துல்லியமாக தாக்கவும், எதிரிகளின் கண்ணில் படாதவாறு மறைந்து கொள்ளவும், ஏவுகணைகள் காற்றில் தன் இயக்கத்தை கட்டுப்படுத்துவது என பல அம்சங்கள் இந்த ஏவுகணைகளின் சிறப்பம்சமாக பார்க்கப்படுகின்றது.