அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் அதிருப்தி அடைந்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்திலிருந்து வெளியேற்றி பிரிதொரு கட்சியை உருவாக்க இரகசிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சு பதவி வகிக்கும் அமைச்சர்கள் சிலரின் திட்டங்களை நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ச உள்ளிட்ட குழு ஏற்றுக் கொள்ளாத காரணத்தினால் இவ்வாறு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களை இலக்கு வைத்து பிரத்தியேகமாக பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது .