வேல்ஸில் கொவிட் தொற்று வேகமெடுத்துள்ள நிலையில், தேசிய சுகாதார சேவை முழுவதும் திட்டமிடப்பட்ட சிகிச்சைகள் தாமதமாகியுள்ளதாக சுகாதார அமைச்சர் மோர்கன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து சுகாதார சேவை மீதான அழுத்தம் இந்த அளவில் காணப்படவில்லை அவர் மேலும் கூறினார்.
கண்புரை அறுவை சிகிச்சை போன்ற அவசரமற்ற அறுவை சிகிச்சைகளுக்காக காத்திருக்கும் நபர்களின் எண்ணிக்கை இதன்மூலம் அதிகரித்துள்ளது.
அதிகரித்து வரும் கொவிட் தொற்றுகள் குறைந்த படுக்கை திறன், ஊழியர்களின் நோய் மற்றும் நோயாளிகளை வெளியேற்றுவதில் சிரமங்களுக்கு வழிவகுத்துள்ளன.
அழுத்தத்தைக் குறைக்கும் முயற்சியில், அனூரின் பெவன் சுகாதார சபைப் பகுதியில் உள்ள அனைத்து அத்தியாவசியமற்ற செயற்பாடுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சுகாதார சபை கடந்த செவ்வாய்க்கிழமை கருப்பு எச்சரிக்கையை வெளியிட்டது. இது முற்றிலும் தேவைப்பட்டால் மட்டுமே மருத்துவமனைக்குச் செல்ல மக்களை வலியுறுத்தியது.