மியாமி பகிரங்க டென்னிஸ் தொடர், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் கார்ஃபியா மற்றும் போலந்தின் இகா ஸ்விடெக்கின் கைகளை சம்பியன் கிண்ணம் அலங்கரித்தவாறு நிறைவுக்கு வந்துள்ளது.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் கார்ஃபியா, நோர்வேயின் காஸ்பர் ரூட்டுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் கார்ஃபியா, 7-5, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தை வென்றார்.
அதேபோல பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், போலந்தின் இகா ஸ்விடெக், ஜப்பானின் நவோமி ஒசாகாவை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், போலந்தின் இகா ஸ்விடெக், 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றார்.