கிளிநொச்சி நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பல்வேறு பகுதியிலிருந்தும் மக்கள் வருகை தந்து மண்ணெண்ணை பெற்று செல்கின்றனர் என முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் இதுகுறித்து கருத்து வெளியிடும் போது, டீசல் பெற்றுக்கொள்ள வந்தோம். இருந்தும் கிடைக்கவில்லை. அதனால் காத்திருக்கின்றோம். ஆனால் கிளிநொச்சி பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அதிகளவான எரிபொருள் மக்களிற்கு வழங்கப்பட்டு வருகின்றது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மக்களிற்கு தேவையான எரிபொருளை போதுமான அளவில் பெற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், வாகனங்களிற்கு மண்ணெண்ணை வழங்குவதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.