அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளிப்பதை ஒருவாரம் பிற்போட எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.
தற்போதைய பொருளாதார இன்னல்களுக்கு தீர்வு காணும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலுக்கு அது நேரடி தாக்கம் செலுத்தும் என பொருளாதார நிபுணர்கள் முன்வைத்த விடயங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த நாடாளுமன்ற வாரத்தில் சபாநாயகரிடம் கையளிக்க எதிர்க்கட்சி முன்னதாக திட்டமிட்டிருந்தது.
அதற்கான பிரேரணைகளில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் கையொப்பமிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.