நாட்டில் இன்றும் (வெள்ளிக்கிழமை) மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாளைய தினம் மின்வெட்டு அமுலாக்கப்படுவது குறித்து இன்று கூடி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அந்த சபை தெரிவித்துள்ளது.
மின்உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் கிடைக்க பெற்றமை மற்றும் நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பதிவாகும் மழை வீழ்ச்சி என்பனவற்றை கருத்திற்கொண்டு தீர்மானம் மேற்கொள்ளப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.