பொருளாதார மீட்சி மற்றும் தேவையான அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டுவருவதற்கு புதிய அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும் என டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நடைபெற்ற சந்திப்பில் இதனை தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.
மேலும் தாமதமின்றி புதிய அரசாங்கத்தை அமைப்பது குறித்த தனது நிலைப்பாட்டை இதன்போது மீண்டும் வலியுறுத்தியதாக டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.