ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ, அக்கட்சியிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளார்.
இன்று(புதன்கிழமை) மாலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி கூட்டத்தில் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தனது எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை எனவும் தற்போது சுயாதீனமாக நாடாளுமன்றில் செயற்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.