சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுடன் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தங்களை பிரித்தானியா ஒப்புக்கொண்டுள்ளது.
இது எந்தவொரு நாடும் தாக்குதலுக்கு உள்ளானால் அவர்களுக்கு உதவிக்கு வரும் வகையில் இந்த ஒப்பந்தம் வழிவகைசெய்யப்பட்டுள்ளது.
பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், நேட்டோவில் இணைவது குறித்த விவாதங்களுக்கு மத்தியில், ஒப்பந்தங்களில் கையெழுத்திட இரு நாடுகளுக்கும் சென்றார்.
பிரதமர் ஜோன்சன் மற்றும் சுவீடன் பிரதமர் மக்டலேனா ஆண்டர்சன் ஆகியோர் உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை கருத்தில் கொண்டு ஒத்துழைப்பு இன்னும் முக்கியமானது என்று கூறினார்.
இரண்டாவது ஒப்பந்தம் பின்லாந்து ஜனாதிபதி சௌலி நினிஸ்டோவுடன் ஒரு கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தம் குறுகிய கால இடைவெளி அல்ல என்று பிரதமர் ஜோன்சன் வலியுறுத்தினார், அதே நேரத்தில் பின்லாந்து நேட்டோ தற்காப்பு கூட்டணியில் சேரலாமா என்று கருதுகிறது,