பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வழமைபோன்று செயற்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மாணவர்களை பாடசாலைக்கு அழைக்கும் நேரம் தொடர்பாக பிரச்சினைகள் ஏற்படுமாயின், அது குறித்த நடவடிக்கை எடுப்பதற்கு மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.