கொரோனா தடுப்பூசி திட்டம் குறித்து மத்திய அரசு இன்று மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளது.
மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷண் தலைமையில் தடுப்பூசித் திட்டம் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.
இதுவரை 192 கோடி டோஸ்களை இந்தத்திட்டத்தில் இந்தியா இலவசமாக செலுத்தியுள்ளது.
12 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு 3 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் 18 வயது முதல் 59 வயதுக்கு உட்பட்டோருக்கான முன்னெச்சரிக்கை பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணியும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.