அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பாக ஆராய்ந்து இறுதித் தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகள் இன்று ஒன்றுகூடவுள்ளன.
இந்த சந்திப்பானது இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு தொலைக்காணொளி தொழிநுட்பத்தின் ஊடாக இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் உள்ளிட்ட ஏனைய தமிழ்கட்சிகளும் இந்த சந்திப்பில் பங்கேற்கவுள்ளன.