மீதொட்டமுல்ல காணி வழக்கில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு ஒத்திவைக்கப்பட்ட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ( திங்கட்கிழமை ) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அப்போதைய மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அவரது மனைவி மொரீன் ரணதுங்க மற்றும் நரேஷ் குமார் ஃபரீக் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் 15 குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்தமை குறிப்பிடதக்கது .
இதற்கமைய அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 25 மில்லியன் ரூபா அபராதமும் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது .