இங்கிலாந்தில் மக்கள் புகையிலை பொருட்களை வாங்கும் வயதை ஆண்டுதோறும் படிப்படியாக அதிகரிக்க வேண்டும் என அரசாங்கத்திற்கான மதிப்பாய்வு பரிந்துரைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று (வியாழக்கிழமை) பிற்பகுதியில் வெளியிடப்படும் அமைச்சர்களுக்கான முன்னாள் தொண்டு நிறுவன தலைவர் ஜாவேத் கானின் அறிக்கையில் இந்த அழைப்பு சேர்க்கப்படும்.
2030ஆம் ஆண்டுக்குள் புகைப்பிடிப்பதை ஒழிப்பதில் 18 வயதிலிருந்து வயதை உயர்த்துவது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
1970ஆம் ஆண்டுகளில் இருந்து புகைபிடிக்கும் வீதம் குறைந்து வருகிறது. ஆனால் இங்கிலாந்தில் இன்னும் ஆறு மில்லியன் புகைப்பிடிப்பவர்கள் உள்ளனர். பிரித்தானியா முழுவதும் ஏழு மில்லியன் பேர் உள்ளனர்.
கடைசியாக மீதமுள்ள குழுக்களை புகையிலை பொருட்கள் பாவனையில் இருந்து விட்டு விலகுவதற்கு புதிய யோசனைகள் தேவை என்று அரசாங்கம் கூறியுள்ளது.