இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுடன் தொடர்புடைய வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தல் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த பட்டியல் எதிர்வரும் ஜூலை 12ஆம் திகதி வரை காட்சிப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் மற்றும் வாக்காளர் பட்டியலிலுக்கு சேர்க்கப்படும் பெயர் பட்டியல் இம்மாதம் 15ஆம் திகதி முதல் ஜூலை 12ஆம் திகதி வரை காட்சிப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.