கந்தகாடு கைது செய்யப்பட்ட இலங்கை இராணுவம் மற்றும் விமானப்படையைச் சேர்ந்த நான்கு சார்ஜன்ட்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த நாலவரையும் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.