திருச்சி, மதுரை விமான நிலையங்களிலிருந்து இலங்கைக்கான சரக்கு விமான சேவை நேற்று(1) முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து சென்னை, திருச்சி, மதுரை ஆகிய விமான நிலையங்களுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் விமான சேவையினை முன்னெடுத்துள்ளது.
இதற்கமைய நாளாந்தம் சென்னைக்கு 3 சேவையும், திருச்சிக்கு 3 சேவையும், மதுரைக்கு ஒரு சேவையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எனினும், தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக சென்னைக்கு 2 விமான சேவையும், திருச்சிக்கு ஒரு விமான சேவையும், மதுரைக்கு வாரத்துக்கு 3 சேவையும் என குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், நேற்று முதல் சரக்கு விமான சேவையை நிறுத்திக்கொள்வதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்காரணமாக சென்னை, திருச்சி, மதுரையில் இருந்து நாளொன்றுக்கு சராசரியாக ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த 10 தொன் பொருட்கள் தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.