கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்று போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலியின் ஜானிக் சின்னருடன் மோதினார்.
இதில் முதல் இரு செட்களை 7-5, 6-2 என சின்னர் கைப்பற்றினார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட ஜோகோவிச் அதிரடியாக ஆடி 6-3, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் அடுத்த 3 சுற்றுகளை வென்றார்.
இதன்மூலம் ஜோகோவிச் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதி சுற்றில் பெல்ஜியத்தின் டேவிட் கோபின், அமெரிக்காவின் கேமரூன் நூரியுடன் மோதினார்.
இதில் இருவரும் தலா 2 செட்களைக் கைப்பற்றினர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் இறுதி செட்டை நூரி கைப்பற்றினார்.
இதன்மூலம் 3-6, 7-5, 2-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வென்ற நூரி அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் நூரி உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச்சை எதிர்கொள்கின்றார்.