வானில் ஏவுகணைகளை அழித்துத் தாக்கும் ‘அபியாஸ்’ விமான சோதனை வெற்றிகரமாக நிறைவேறயமையை அடுத்து பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் வளர்ச்சி ஆயுதப்படைகளுக்கான வான்வழி இலக்குகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் என்றும் அவர் கூறினார்.
அநேரம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் சோதனை ஆகியவற்றில் தொடர்புடைய குழுக்களின் முயற்சிகளை பாதுகாப்பு துறையின் செயலாளரும், இந்த அமைப்பின் தலைவருமான கலாநிதி. ஜி.சதீஷ் ரெட்டியும் பாராட்டியுள்ளார்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தயாரில்ப்பில் வானில் ஏவுகணைகளை அழித்துத் தாக்கும் ‘அபியாஸ்’ விமான சோதனை வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது.
ஒடிசா கடற்கரையில் உள்ள சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்திலிருந்து அபியாஸ், வானில் பறக்கவிட்டு சோதனை செய்யப்பட்டது.
இராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கழகத்தால் உருவாக்கப்பட்ட இந்த அபியாஸ் காண்பதற்கு சிறிய ரக விமானம் போன்று தோற்றமளிக்கின்றது.
அதேநேரம், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அபியாஸ், எதிரிகளின் வான் இலக்கை துல்லியமாக தாக்கும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறைந்த உயரத்தில் இந்த விமானத்தின் செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் அதிக சூழ்ச்சித்திறன் உட்பட, பல விடயங்கள் சோதனை செய்யப்பட்டன.
அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் அனைத்தும் வெற்றியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.