விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடால் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடால், அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்சை எதிர்கொண்டார்.
இப்போட்டியில், ரபேல் நடால், 3-6, 7-5, 3-6, 7-5, 7-6 என்ற செட் கணக்குகளில் போராடி வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதேபோல மற்றொரு காலிறுதிப் போட்டியில், அவுஸ்ரேலியாவின் நிக் கிர்கியோஸ், சிலியின் கிறிஸ்டியன் கரினை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றார்.