ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள மேல்சபைத் தேர்தலுக்கு முன்னதாக, இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில், மேற்கு ஜப்பானின் நாரா நகரில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது, அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
உரை நிகழ்த்தும் போது, அவர் தரையில் விழுவதற்கு சற்று முன் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதாகவும் சுடப்பட்ட பின்னர் மார்பில் இருந்து இரத்தம் கசிந்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிஸார், ஒருவரை காவலில் வைத்துள்ளனர்.
துப்பாக்கிதாரி, அவரை பின்னால் இருந்து சுட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் விபரித்துள்ளனர். முன்னாள் பிரதமரின் நிலை என்ன குறித்து இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.
கடந்த 2020ஆம் ஆண்டு இராஜினாமா செய்யும் வரை நாட்டின் நீண்ட காலம் பிரதமராக ஷின்சோ அபே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.