சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்புக்காக பொலிஸ் அதிரடிப் படையினருடன், மேலதிக குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகியதன் பின்னர் பதில் ஜனாதிபதியாக சபநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் அவரது இல்லத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.