டீசல் கப்பல் ஒன்று எதிர்வரும் 15ஆம் மற்றும் 17ஆம் திகதி வருவதற்கும், பெற்றோல் கப்பல் 22ஆம் மற்றும் 24 ஆம் திகதிக்கு வருவதற்கும் ஐஓசி நிறுவனத்துக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 9ஆம் திகதி வர வேண்டிய இந்த கப்பல்கள், வானிலை சீர்கேடு காரணமாக தாமதமாகிவிட்டதாகவும், சரியான நேரத்தில் எரிபொருட்களை கப்பலில் ஏற்றிக்கொள்ள முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் எரிபொருட்களுடன் கப்பல் நேற்று காலை இந்தியாவிலிருந்து புறப்பட்டதை விநியோகஸ்தர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சின் உதவியுடன் டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்களுக்கான முழு கொடுப்பனவுகளும் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.