இன்றைய தினம்(11) மிக முக்கிய கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றுள்ளது.
இதன்போது நாளைய தினத்திற்கும் கட்சித்தலைவர்களின் மற்றுமொரு கூட்டத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாளைய கூட்டத்துக்கு போராட்டக்காரர்கள் சிலரையும் அழைத்துப் பேசுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புதிய ஜனாதிபதியை தெரிவுச் செய்வதற்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 15 ஆம் திகதியன்று பொறுப்பேற்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், எதிர்வரும் 20ஆம் திகதி வாக்கெடுப்பினை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே இந்த வாக்கெடுப்பின் வாக்களிக்க முடியும்.