இலங்கையின் நீண்டகால அரசியல் ஸ்திரமின்மை சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவி பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றத்தை தாமதப்படுத்தலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணவும் எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறைக்கு தீர்வு காணவும் இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை விரைவில் ஏற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தனது ஆறு வருட பதவிக்காலம் முடியும் வரை மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றுவேன் என கலாநிதி நந்தலால் வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனவரியில் இந்தியாவிடமிருந்து 400 மில்லியன் டொலர் நாணய இடமாற்று மற்றும் அதற்குப் பிறகு இரண்டு தவணைகளில் 1.5 பில்லியன் டொலர்களைப் பெற்றுள்ள இலங்கை பெற்றுள்ளது.
இந்நிலையில் தற்போது இந்திய ரிசர்வ் வங்கியுடன் 1 பில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்றத்திற்கான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கூறியுள்ளார்.