ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சீனாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார் என சீனாவுக்கான இலங்கை தூதுவர் பாலித கொஹொன தெரிவித்துள்ளார்.
வர்த்தகம் முதலீடு மற்றும் சுற்றுலா உள்ளிட்ட விடயங்களில் ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக அவர் சீனாவிற்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளார் .
மேலும் கொழும்பிலும். அம்பாந்தோட்டையிலும் சீனாவின் ஆதரவுடன் கூடிய பரந்த துறைமுகத் திட்டங்களுக்கு மேலதிக முதலீட்டை மேற்கொள்வதன் மூலம் பீய்ஜிங், இலங்கைக்கு உதவ முடியும் என இலங்கை தூதுவர் பாலித கொஹொன குறிப்பிட்டுள்ளார் .
இதேவேளை சீனா தொடர்பில், புதிய அரசாங்கத்தின் கொள்கையில் எந்த அடிப்படை மாற்றமும் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்தார்.