நாடளாவிய ரீதியில் 4 மில்லியன் பேர் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக பதிவு செய்துள்ளனர்.
எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 299 சிபெட்கோ மற்றும் 34 ஐஓசி எரிபொருள் நிலையங்களில் நேற்று QR முறையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நேற்றைய தினம் மொத்தமாக 92 ஆயிரத்து 845 வாகனங்களுக்கு QR முறையில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.